இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூன் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-06-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  2017.06.22 விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையியற் கட்டளைகள் 17 இன் கீழ் பிரேரணையை மீள எடுத்துக் கொள்ளல்

துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படுதல் -
‘B’ :  பொருளாதார அபிவிருத்தி
‘C’ :  சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை
‘D’ :  நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல்

‘E’ :  கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலத்தை ஒரு மணித்தியாலத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கி
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் தேசிய நிறுவனம் (சமுத்திரப் பல்கலைக்கழகம்)

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் இரண்டாவது அறிக்கை (2016.05.04 முதல் 2016.10.28 வரையிலான) அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்கள் சார்பாக குழு உறுப்பினர் கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ சந்திம வீரக்கொடி                       -                 மூன்று மனுக்கள்
(ii) கௌரவ அ. அரவிந்த் குமார்                   
(iii) கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா               -                   மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

மன்னார் தெற்கு மற்றும் பாக்கு நீரிணை அண்டிய கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடிப்பு தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ ஏ. எம். எஸ். அதிகாரி
(ii) மறைந்த கௌரவ சந்திர ரணதுங்க
(iii) மறைந்த கௌரவ மைத்திரிபால ஹேரத்
(iv) மறைந்த கௌரவ ஆரியரத்ன ஜயதிலக


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“2017.06.21 அன்று சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சில் இடம்பெற்ற சம்பவம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1715 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom