இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூலை 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-07-04

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2017.01.01 முதல் 2017.03.31 வரையிலான  நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரதத் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்டச் செயலகம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்டச் செயலகம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
(v) 2016 ஆம் ஆண்டுக்கான அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2014 ஆம் ஆண்டுக்கான அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம்
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை
(viii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை எச்டிஎப்சி வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்கள் சார்பாக குழு உறுப்பினர் கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ ஜோன் அமரதுங்க                   
(ii) கௌரவ லஸந்த அலகியவன்ன                   
(iii) கௌரவ விதுற விக்கிரமநாயக்க                   
(iv) கௌரவ அஜித் மான்னப்பெரும                     -       இரண்டு மனுக்கள்
(v) கௌரவ மயந்த திசாநாயக்க
(vi) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

முதுராஜவெல பகுதியில் குப்பைகளை குவித்தல் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கௌரவ பைஸர் முஸ்தபா அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ் பகுதியில் புகையிலைச் செய்கை தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில் இராஜாங்க அமைச்சர், கௌரவ வசந்த அலுவிஹாரே அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) விஹாரைகளின் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு தொடர்பாக பத்திரிகை அறிக்கை பற்றி நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.

(ii) தேசிய லொத்தர் சபை தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ அனுர சிட்னி ஜயரத்ன அவர்களுக்கு “பந்துல லால் பண்டாரிகொட மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள்  சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தங்களது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்த இலங்கையிலுள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1834 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 05ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom