இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூலை 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-07-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.05.01 முதல் 2017.05.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

(ii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

அம்பாறையில் பஸ் தரிப்பு நிலையத்தை நிர்மாணிக்கும் போது சில மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2,6,9 மற்றும் 10 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

(i) பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான ஒழுங்கான முறையியலொன்றை தயாரித்தல்

இலங்கையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றபோது இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கட்சி, நிற பாகுபாட்டு முறையை புறக்கணித்துவிட்டு, நியாயத்தை நிலைநாட்டுவதற்காகன ஒழுங்கான முறையியலொன்றை திட்டமிட்டு, அதனை ஒரு கொள்கையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரசியல்வாதிகளின் முன்னிலையில் பட்டதாரிகள் இழிவாக நடத்தப்படாத வகையில் செயலாற்றுதல் வேண்டுமெனவும் இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(ii) போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான அதிகாரசபையொன்றைத் தாபித்தல்

போதைப் பொருட்களுக்கு அடிமையான எமது நாட்டின் பெருமளவு இளைஞர்கள் அதிலிருந்து விடுபடும் எதிர்பார்ப்புடன் உள்ள போதிலும், அதற்கான உறுதியான வேலைத்திட்டமொன்று அல்லது முறையியலொன்று இல்லாமை, அவர்கள் எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினையாக உள்ளதால், சமயத் தலைவர்களின் தலைமையில் பௌத்த மதரீதியான ஆன்மீக தியான முறைகள், உள்நாட்டு மருத்துவ முறைகள் மற்றும் வேறு சிகிச்சை முறைகளையும் பயன்படுத்தி போதைப் பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான அதிகாரசபையொன்றைத் தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(iii) புத்தளம் மாவட்டத்தை தேசிய சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிடுதல்

புத்தளம் மாவட்டத்தில் பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் போன்ற பல்வேறு இனக்குழுக்கள் பல ஆண்டுகள் தொடக்கம் மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றமையால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான நோக்கமான சகவாழ்வை மென்மேலும் மேம்படுத்தும் பொருட்டு இந்த மாவட்டத்தை தேசிய சக வாழ்வினதும், நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(iv) முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்

நாட்டுக்குப் பயனுள்ள சிறந்த மனிதர்களை உருவாக்கும் முக்கிய களமாகவிருக்கும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் பாரிய எண்ணிக்கையில் நாடெங்கிலும் உள்ள போதிலும், அவற்றில் பெரும்பாலானவை உரிய தரம் மற்றும் முறையியலின்றி பேணப்படுவதால், பிள்ளைகளின் ஆளுமை விருத்தியிலும், விழுமியங்கள் மற்றும் அடிப்படைக் கல்வி ஒழுங்குமுறைப்படுத்தலிலும், எதிர்மறையான நிலை தென்படுவதால் முன்பள்ளி கல்வி நிலையங்களில் பௌதீக வசதிகளைப் பேணுதல், தகைமை வாய்ந்த முன்பள்ளி நிருவாகிகளை நியமித்தல், கற்பித்தல் செயற்பாட்டின் தரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களை பயிற்சிப் பாட நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் முன்பள்ளி நிருவாகிகளுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளம்/ படிகள் வழங்குவதன் ஊடாக அவர்களின் எதிர்கால பாதுகாப்பை ஏற்படுத்தி, முன்பள்ளி கல்வியைக் கட்டியெழுப்புவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுத்தமைக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


அதனையடுத்து, 1339 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூலை 25ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom