இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

2015 டிசம்பர் 19 அன்று பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது, -

i. துறைசார் மேற்பார்வை குழுக்கள் எனும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தல். 2015 டிசம்பர் 19 அன்று சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் (திருத்தங்களுடன்) PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
[ தீர்மானத்தை பதிவிறக்கம் செய்க ]

 

2015 டிசம்பர் 19 அன்று மேலுமொரு தீர்மானம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது, -

ii. துறைசார் மேற்பார்வைக் குழுவானது செயற்படுகின்ற கால எல்லையினுள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 104 முதல் 120 வரை (இவ்விரு நிலையியற் கட்டளைகள் உள்ளடங்கலாக) இடைநிறுத்தப்படுதல். சபையினால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் 2015 டிசம்பர் 19ஆந் திகதிய ஹன்சாடில் 3013ஆம் நிரலில் தரப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கீழே மீளபிரசுரிக்கப்பட்டுள்ளது:

(கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல)

Sir, I move,

"That this Parliament resolves that during the operation of the Sectoral Oversight Committees, Standing Order Nos. 104 to 120 of the Parliament (both inclusive) shall be suspended."

வினா விடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

 1. இளைஞர்
 2. உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 3. உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 4. கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 5. கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 6. சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 7. சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 8. சுகாதாரம் மற்றும் மனித சேமநலம்
 9. தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 10. நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 11. பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 12. பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 13. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 14. வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 15. வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
 16. வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

“மேற்பார்வை நிலையியற் குழுக்கள்” என அழைக்கப்படும் கீழே குறிப்பிடப்பட்டவாறான குழுக்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதோடு, அவை ஒவ்வொன்றும் தமது நியாயாதிக்கத்தினுள் வரும் எல்லா சட்டமூலங்கள், தீர்மானங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள் மற்றும் அதனோடிணைந்த  ஏனைய விடயங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்கான நியாயாதிக்கத்தையும் தொடர்புடைய பணிகளையும் கொண்டிருக்க வேண்டுமெனவும்; 

அவற்றின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட சகல சட்டமூலங்கள், தீர்மானங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய விடயங்களும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் அறிக்கைக்காக சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom