இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கக் கணக்குக் குழு


குழு செயலாளரை தொடர்பு கொள்க
அநுஷா சீ.பி. சூரியப்பெரும
உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்)
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
011 2777382
011 2777559
pac@parliament.lk
இக்குழு காலவதியாகியுள்ளது.
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் - 1 ஆம் கூட்டத் தொடர்)


பாராளுமன்றத்தில் உள்ள இரு நிதிசார் குழுக்களில் இதுவும் ஒன்று. தெரிவுக்குழுவில் நியமிக்கப்படும் பன்னிரண்டு உறுப்பினர்களை இக்குழு கொண்டிருக்கும். அரச செலவினங்களுக்காக பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட பணத்தொகையின் ஒதுக்கீடுகளைக் காட்டும் கணக்கைப் பரிசோதிப்பதே இக்குழுவின் கடமையாகும்.

அரசாங்கக் கணக்குக்குழுவின் பணி அரசாங்கத்தினதும் அதன் அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூர் அதிகாரசபைகள் ஆகியவற்றினதும் முகாமைத்துவ வினைத்திறனையும் நிதி ஒழுக்காற்றையும் ஆராய்வதாகும். நிலையியல் கட்டளை 125 இன் கீழ் ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் தாபிக்கப்படும் இக்குழு 24 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் கட்சிகளின் ஆக்க அமைவை இது பிரதிபலிக்கும். இதன் கூட்டநடப்பெண் நான்காகும்.

அரசாங்கக் கணக்குக் குழுவின் கடமை, பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்ட தொகைகளை, ஆறு தொகுதிகளைக் கொண்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் சேர்த்து பரிசீலிப்பதாகும். அதன் கலந்தாராய்வுகளின் போது பிரதம கணக்கீட்டு அலுவலர்களான சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களிடமிருந்தும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் ஆகியோரிடமிருந்தும் சாட்சியங்களைப் பெறும். அரசாங்க நிதி, அரச கணக்குகள் மற்றும் தேசிய வரவுசெலவுத்திட்ட பணிப்பாளர் நாயகங்களை அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளையும் குழு கிரமமாக வரவழைக்கின்றது.

தமது அமைச்சுகளின் அதிகார வரம்பின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் நிதியியல் செயற்பாடுகளை விளக்கி நியாயப்படுத்துவதற்காகக் குழு முன்னிலையில் நேரடியாகத் தோற்றுதல் பிரதம கணக்கீட்டு அலுவலர்களின் கடமையாகும்.

குழுவின் விதப்புரைகள் அரசாங்கத் திணைக்களங்களுக்கும் அமைச்சுகளுக்குமான பணிப்புகளைக் கொண்டிருக்கலாம். அத்துடன் அவை பாராளுமன்றத்தின் பணிப்புகளாகக் கொள்ளப்படுதலும் வேண்டும்.

குழு அறிக்கைகளின் பிரதிகள் அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் அதிகாரசபைகளின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து பின்வரும் உறுப்பினர்கள் அரசாங்கக் கணக்குக் குழுவின் தவிசாளர் பதவியை வகித்துள்ளனர்.

 • கௌரவ கே. கனகரத்தினம், பா.உ.
 • கௌரவ அல்பட் எப். பீரிஸ், பா.உ.
 • கௌரவ ரொஸ்லின் கொச், பா.உ.
 • கௌரவ ஆர்.எஸ்.வி. பூலியர், சீ.பி.ஈ., பா.உ.
 • கௌரவ வீ.ஏ, கந்தையா, பா.உ.
 • கௌரவ பேனாட் சொய்சா, பா.உ.
 • கௌரவ எஸ். தொண்டமான், பா.உ.
 • கௌரவ பி.எஸ். சூசைதாசன், பா.உ.
 • கௌரவ டபிள்யூ.பி.பீ(B). திசாநாயக்க, பா.உ.
 • கௌரவ ஜீ.வி.எஸ்.த சில்வா, பா.உ.
 • கௌரவ சந்திரகுமார விஜய குணவர்தன, பா.உ.
 • கௌரவ ஈ.பி. போல் பெரேரா, ஜ.ச., பா.உ.
 • கௌரவ எம்.ஏ. அப்துல் மஜீட், பா.உ.
 • கௌரவ (கலாநிதி) பி.பீ(B).ஜீ. கலுகல்ல, பா.உ.
 • கௌரவ (பேரா.) டபிள்யு.ஏ. விஸ்வா வர்ணபால, பா.உ.
 • கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, பா.உ.
 • கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, பா.உ.
 • கௌரவ ரஊப் ஹக்கீம், பா.உ.
 • கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, பா.உ.
 • கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.
 • கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.

 

எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குக் குழு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom