இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு


குழு செயலாளரை தொடர்பு கொள்க
நிஷாந்தி சமரசிங்க விக்கிரமரத்ன
உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்)
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
011 2777301
0112777556
cope@parliament.lk
இக்குழு காலவதியாகியுள்ளது.
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் - 1 ஆம் கூட்டத் தொடர்)


பாராளுமன்றத்தில் உள்ள நிதி சார்ந்த மற்றைய குழு இதுவாகும். இது தெரிவுக்குழுவில் நியமிக்கப்படும் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் ஏதாவது வியாபார நடவடிக்கைகளினதும், அரச கூட்டுத்தாபனங்களினதும் கணக்குகளைப் பரிசோதிப்பதே இக்குழுவின் கடமையாகும்.

எந்தவொரு நபரையும் தம்முன் வரவழைத்து விசாரிக்கவும், பத்திரம், பதிவு, புத்தகம் வேறு ஏதாவது ஆவணங்கள் என்பனவற்றைத் தருவித்துப் பரிசோதிக்கவும், களஞ்சியங்களையும் சொத்துக்களையும் அணுகிச் சென்று ஆராயவும் இவ்விரு குழுக்களுக்கும் அதிகாரமுண்டு.

அரசாங்கக் கணக்குக் குழு, அரச நிறுவனங்களின் நிதிச் செயற்றிறன் பற்றி மேற்பார்வை செய்யும் அதேவேளை, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, அரசிற்கு நிதி தொடர்பாக அதிகாரமுள்ள, பொதுக் கூட்டுத்தாபனங்களிலும், பகுதி அரச நிறுவனங்களிலும், நிதி ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு 21.06.1979 இல் உருவாக்கப்பட்டது.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, பாராளுமன்ற அங்கத்துவத்துக்கேற்ப, 24 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அத்துடன், இது, நிலையியற் கட்டளை 126 இன் கீழ், ஒவ்வொரு புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பத்தின் போதும் நியமிக்கப்படுகிறது. இக்குழுவின் தவிசாளர், முதலாவது கூட்டத்தின் போது, குழு உறுப்பினர்களால் நியமிக்கப்படுவார். இதன் கூட்ட நடப்பெண் நான்காகும்.

இக்குழுவின் கடமையானது, அரசாங்கக் கூட்டுத்தாபனங்களினதும், அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிற வியாபாரங்களினதும், பரிசோதிக்கப்பட்ட கணக்குகள், வரவு-செலவுத் திட்டங்கள், மதிப்பீடுகள், நிதி நடைமுறைகள், செயற்பாடு மற்றும் முகாமைத்துவம் பற்றி பாராளுமன்றத்திற்கு அறிவித்தலாகும்.

இந்நிறுவனங்களின் கணக்குகள் முதலில், கணக்குப் பரிசோதகர் – தலைமையதிபதியினால் பரிசோதிக்கப்படும். இக்குழுவின் பரிசோதனைகள் இவ்வறிக்கைகளிலேயே தங்கியிருக்கும். குழு அவசியமெனக் கருதுமிடத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், வேறு பிறருக்கும், சாட்சியம் எதனையும் பெறும் பொருட்டோ அல்லது ஆவணங்களைக் கோரியோ அழைப்பு விடுப்பதற்கு குழுவிற்கு அதிகாரம் உண்டு. இக்குழு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் உள்ளடக்கப்படும் சிபாரிசுகள், சம்பந்தப்பட்ட கூட்டுத்தாபனங்கள் அல்லது சட்ட ரீதியிலான நிர்வாக சபைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகக் கருதப்படுகின்றன.

ஆரம்பித்த காலத்திலிருந்து இற்றைவரை, பின்வரும் உறுப்பினர்கள், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் பதவியை வகித்துள்ளனர்.

 • கௌரவ ஜோர்ஜ் அபேகுணசேகர, பா.உ.
 • கௌரவ எம்.எஸ். அமரசிரி, பா.உ.
 • கௌரவ ஜெ.ஏ.இ. அமரதுங்க, பா.உ.
 • கௌரவ விமல் விக்கிரமசிங்க, பா.உ.
 • கௌரவ ரொஹான் அபேகுணசேகர, பா.உ.
 • கௌரவ டி.பி(P). விக்கிரமசிங்க, பா.உ.
 • கௌரவ (பேரா.) டபிள்யு.ஏ. விஸ்வ வர்ணபால, பா.உ.
 • கௌரவ ரெஜி ரணதுங்க, பா.உ.
 • கௌரவ ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, பா.உ.
 • கௌரவ ரோஹித (B)போகொல்லாகம, பா.உ.
 • கௌரவ விஜேதாச ராஜபக்ஷ, பா.உ.
 • கௌரவ டபிள்யூ.டீ.ஜே. செனெவிரத்ன, பா.உ.
 • கௌரவ டியூ குணசேக்கர, பா.உ.
 • கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

 

எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom