இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“BestWeb.lk 2017” போட்டியின் போது parliament.lk க்கு உச்ச எண்ணிக்கையான விருதுகள்

திகதி : 2017-04-05

bestweb2017-logoLK ஆள்கள பதிவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “BestWeb.lk” விருது வழங்கல் வைபவத்தின் போது இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது (parliament.lk) அதிக புகழாரத்துக்குரிய இணையத்தளமாக திகழ்ந்தது. இவ்வைபவமானது, 2017 ஏப்ரல் 4ஆம் திகதி கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் இணையத்தளமானது அரச பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினை பெறுகின்ற அதேவேளை சிங்கள மற்றும் தமிழ் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது. மேலும் இது, மிகவும் பிரசித்தமான அரச இணையத்தளமாகவும் தெரிவு செய்யப்பட்டது.

 

7வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இவ்வாண்டின் போட்டியானது, முன்னரைப் போன்று வெற்றியாளர்களின் தெரிவானது பெற்றுக் கொண்ட வாக்குகள், இணைய நெரிசல் மற்றும் நடுவர்கள் குழுவின் புள்ளிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டது. இணையத்தளங்கள் படைப்பாற்றல், வரைகலை மற்றும் வடிவமைப்பின் தரம், கலைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பயனருக்கான உள்ளடக்கத்தின் தரம் என்பவற்றைக் கொண்டு தீர்ப்பு செய்யப்பட்டன. 9 பிரவுகளின் கீழ் மொத்தமாக 250 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் போட்டியில் பங்கேற்றின. Parliament.lk யானது இதற்கு முன்னர் இப்போட்டியின் போது 2009, 2010, 2013, 2014 மற்றும் 2015 களில் வெற்றி பெற்றுள்ளது.

 

பொது மக்களுக்கு பாராளுமன்றத்துடன் தொடர்பினை வைத்துக் கொள்வதற்கு கையடக்கப் பயன்பாடு, இற்கு மேலதிகமாக Parliament.lk யானது மேலதிக தொடர்பாடல் சாதனமாக தொழிற்படுகின்றது. சபை நடவடிக்கை முறைமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், சட்டங்களும் சட்டமூலங்களும், வினாக்கள், குழு தகவல்கள், நாட்காட்டி, செய்திகள், புள்ளிவிபரவியல் போன்ற மேலும் பல பாராளுமன்ற தகவல்களை இணையத்தளம் வழங்குகின்றது. பாராளுமன்ற நடப்பை பார்வையிடல் மட்டுமல்லாது ஹன்சாட், ஒழுங்குப் பத்திரங்கள், ஒழுங்குப் புத்தகங்கள், அனுபந்தங்கள் போன்ற மேலும் பல ஆவணங்களை இவ்இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 2008 இல் இவ்விணயத்தளத்தின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகள் வெளியிடப்பட்டது முதல், ஒருங்கிணைக்கப்பட்டவாறு அனைத்து மூன்று பதிப்புகளையும் நிலைபெறச் செய்துள்ளதுடன் பங்குதாரர்களுக்கு அதி நவீன தகவல்களையும் வழங்குகின்றது.

 

விருது வழங்கல் வைபவத்தின் போது அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல புகழ்பெற்ற அதிதிகள் கலந்து கொண்டனர். தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் திரு. வசந்த தேசப்பிரிய, பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom