இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

E-PAC முனைப்புகளின் தற்போதைய செயற்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்களை மதிப்பிடல் தொடர்பான பட்டறை

திகதி : 2017-06-28

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பு (Westminster Foundation for Democracy) உடன் ஒன்றிணைந்து இலங்கை பாராளுமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரசாங்க கணக்கு குழுவின் உறுப்பினர்களுக்காக நடாத்திய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி மற்றும் குழு உறுப்பினர்களுக்கான E-PAC (இலத்திரனியல் அரசாங்க கணக்கு குழு) முனைப்புகளின் தற்போதைய செயற்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்பவற்றை மதிப்பிடுவதற்கான பட்டறை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் அவர்களின் தலைமையில் 2017 ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் நீர்கொழும்பு ஜெட்விங் புளூ ஹோட்டலில் இடம்பெற்றது.

 

குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் ‘இதுவரையான பயணம் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி, மதிப்பீடு’ தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.

 

இங்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் வசந்த தேசப்பிரிய, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் (சட்டவாக்கச் சேவைகள்) கே.ஏ.ரீ.கே. ஜயதிலக்க மற்றும் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களப் பணிப்பாளர் மஹேஷ் பெரேரா ஆகியோரினால் E-PAC முனைப்பினை நிறுவுதல் சம்பந்தமாக வெவ்வேறான தலைப்புகளில் விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன.

 

குழுவின் கௌரவ உறுப்பினர்கள், இலங்கை பாராளுமன்ற அலுவலர்கள் மற்றும் திணைக்களங்கள் பலவற்றின் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

 1 2

 3 4

 5 6

 7 8

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom