இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

படத் தொகுப்பு

The Chamber Door

சபாமண்டபத்தின் அழகிய பிரதான வாயில் கதவு, நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்டுள்ளது. செப்பினாலானதும் வெள்ளி மென் பூச்சைக் கொண்டதுமான, 12' x12’ அளவுடைய இக்கதவு வியக்கத்தக்க முப்பரிமாணத் தோற்றத்தையுடையது. புராதன கல்வெட்டுப் பாணியில் இலங்கை அரசியலமைப்பின் பாயிரம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஓரங்களில் புராதன இலங்கையின் கலைகளைச் சித்தரிக்கும் கவர்ச்சியான தாமரை வடிவங்களும்... மேலும் வாசிக்க

The Chamber

செவ்வக வடிவான சபாமண்டபம், முழுக்கட்டிடத்தினதும் மையப்பகுதியில் இரண்டு மாடிகளின் உயரத்தை உள்ளடக்குகின்றது. மன்னர்களினதும் கோவில்கள் மற்றும் கோறளைகளினதும் கொடிகள், விருதுகள், பதாகைகள் என்பனவற்றில் 18 வெள்ளிக் கொடிகளாக, கறையற்ற உருக்கினாலான கம்பங்களில் அலங்காரமாகக் காட்சியளிக்கின்றன. இவையும், சபாமண்டபத்துக்கு மேல், ஓர் அகல் வட்டத்தில் காணப்படும், ஏழு அடி உயரமான இலங்கையின் தேசிய சின்னமும், சபாமண்டபத்திற்கு அதற்குரிய... மேலும் வாசிக்க

Seating Facility

சபாமண்டபத்தினுள் உறுப்பினர்களுக்கான இருக்கை இட வசதியானது படிப்படியாக உயர்ந்து செல்லக் கூடியவாறு மேசைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. வளிச் சீராக்கம் செய்யப்பட்டுள்ள சபாமண்டபம் 232 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகளைக் கொண்டுள்ளதால், அமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படாமல் மேலும் 16 பேரை உள்ளடக்கக் கூடிய வசதி உண்டு.

அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட இருநூற்று இருபத்தைந்து உறுப்பினர்கள் ஆறு வருடங்களுக்கு பாராளுமன்றத்தில்... மேலும் வாசிக்க

Bar of the House

பிரதான நுழைவாயிலில் இருந்து, சபாமண்டபத்தை அடைவதற்கான படிகளுக்குச் சற்று மேலாக, சபாமண்டபத்தின் நடுப்பகுதியில், செங்கம்பளம் விரிக்கப்பட்ட தரைக்குக் குறுக்காக, நீண்ட செவ்வக வடிவான, நிக்கல் பட்டியொன்று இடப்பட்டுள்ளது. அது சபையின் தடை எல்லையைக் குறிக்கின்றது. அந்தப்பட்டியின் முகப்பில், வீரம், நிலைபேறு, சுபிட்சம் என்பவற்றின் பாரம்பரியமான, சிக்கலான வடிவமைப்பைக் கொண்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது... மேலும் வாசிக்க

The Mace

பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தினதும், பாராளுமன்றத்தினூடாக சபாநாயகரினதும் அதிகாரச் சின்னமாகச்... மேலும் வாசிக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom